மீன் பிடிக்க சென்ற தொழிலாளி சகதியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கே.கே.நகர் பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். மிட்டாய் தயாரிக்கும் தொழிலாளியான இவர் மீன் பிடிப்பதற்காக நயினார் கோவிலில் உள்ள பெரிய கண்மாய்க்கு சென்றார். இந்நிலையில் கண்மாயில் வலைவிரித்து மீன் பிடித்து கொண்டிருந்தபோது திடீரென அங்கிருந்த சகதியில் ராஜன் சிக்கியுள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவிக்கு வருவதற்குள் அவர் தண்ணீர் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற பஜார் […]
