தேனி மாவட்டத்தில் வீடு கட்டுமான பணியில் ஈடுபட்ட பெண் கீழே தவறிவிழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் அல்லிநகரத்தை அடுத்துள்ள வெங்கலாநகரில் பால்ராஜ்(55) மற்றும் அவருடைய மனைவி மல்லிகா(50) வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருமே அப்பகுதியில் கூலித்தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் மல்லிகா நேற்று முன்தினம் துவரங்குளம் பகுதியில் ஒரு வீடு கட்டுமான வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அந்த வீட்டின் முதல் தளத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மல்லிகா எதிர்பாராதவிதமாக தவறிக் கீழே […]
