திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை நகராட்சி ஆரம்பிக்கப்பட்ட 103 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு நகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கு நூற்றாண்டு விழா வளர்ச்சி பணிகள் சிறப்பு திட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் படி தங்கம்மாள் ஓடை மற்றும் கழுத்தறுத்தான் பள்ளம் தூர்வாருதல், பழைய வி.பி.புரம் காலி இடத்தில் கூடுதல் பஸ் நிலையம் கட்டுதல், முக்கிய சாலைகளில் புதிய மின்விளக்கு அமைத்தல், வார சந்தையை மேம்படுத்தல், 5 பூங்காவை மேம்படுத்துதல் ஆகிய பணியிகளுக்கு […]
