கட்டிடம் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பைபாஸ் சாலை புதிய மேம்பாலம் அருகில் சரவணன் என்பவருக்கு சொந்தமான கடையில் புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் கட்டிட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது கட்டிட தூண் திடீரென இடிந்து விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தாராபுரம் பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து மற்றொரு கட்டிட தொழிலாளியான பஜனைமட […]
