பாபநாசம் அருகில் கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம், விக்ரமசிங்கபுரம் அருகிலுள்ள டானா அனவன்குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் திருமலைசாமி(50). இவருக்கு பூமாரி என்ற மனைவியும், வசந்தகுமார், முத்துக்குமார், அஜித்குமார் என்ற மூன்று மகன்களும் உள்ளனர். முதல் இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. மூன்றாவது மகனான அஜித்குமார் ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். திருமலைச்சாமி கட்டிடங்களை இடிக்கும் பணிகளில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் […]
