புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு செயலர், துறைத் தலைவர்கள் தங்களின் கீழ் பணியாற்றும் அரசு ஊழியர்களில் தகுதியான அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டனரா என்பதை உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசி செலுத்தி கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கி அனுப்ப வேண்டும் என்று புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் இன்றி கட்டாய விடுப்பு வழங்க வேண்டும். தங்களின் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் 100% தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதை உறுதிப்படுத்தி வருகின்ற […]
