நாமக்கல் மாவட்டத்தில் மகளை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள சொல்லி பெற்றோர் கட்டாயப்படுத்தியதால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியிலுள்ள கொசவம்பாளையத்தில் வடிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய மகள் சந்தியாவிற்கு(20) கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அங்கிருந்து சண்டை போட்டு சந்தியா பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். இதனையடுத்து சந்தியாவின் பெற்றோர் அவரை இடண்டாவது திருமணம் செய்துகொள்ள சொல்லி […]
