வருமான வரி தாக்கலின் போது தவறாக வசூலிக்கப்பட்ட கட்டணம் திரும்ப செலுத்தப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வருமான வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் வருமான வரி தாக்கல் செய்த போது மென்பொருள் கோளாறு காரணமாக கூடுதல் வட்டி மற்றும் தாமத கட்டணம் செலுத்தியவருக்கு கட்டணங்கள் திரும்பச் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. 2020-21 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31 ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. […]
