தமிழ் வருடத்தின் 9வது மாதமான மார்கழி இன்று தொடங்கியுள்ளது. இந்த மாதம் முழுவதும் அதிகாலையிலேயே பெண்கள் எழுந்து வீட்டு வாசலில் வண்ண கோலமிட்டு இறைவழிபாடு செய்வார்கள். திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களை பாடினால் வளமும், வாழ்வும் செழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் கன்னிப்பெண்கள் இந்த மாதம் முழுவதும் பாவை நோன்பு இருப்பது வழக்கம். மார்கழி மாதம் தொடங்கியுள்ள நிலையில், சிவன் மற்றும் வைணவ கோவில்களில் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. மார்கழி மாத பிறப்பை […]
