சீருடைப் பணியாளர் தேர்வுகளுக்கான அரசின் இலவச பயிற்சி வகுப்பில் சேர செப்.14-ம் தேதி வரைவிண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு போட்டி தேர்வுகள் பயிற்சி மையங்கள் சார்பாக காவலர் தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாக தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டாம் நிலை காவலர்,சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான எழுத்து தேர்வுக்கு மட்டும் கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ள தேர்வர்கள் www.civilservicecoaching.com என்ற […]
