மதுரையில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் தலைமை காவலர் உயிரிழந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . மதுரை மாவட்டம் நெல்பேட்டை பகுதியில் பழமையான கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் மதுரை விளக்குத்தூண் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக வேலை பார்த்து வந்த சரவணன் என்பவர் பலியானார். கண்ணன் என்பவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இடிந்து விழுந்த கட்டிடம் […]
