நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நெல்லை கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட சேரன்மகாதேவி மற்றும் அம்பாசமுத்திரம் ஒன்றிய திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர் பழனி குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திமுக மகளிர் அணி செயலாளரும், எம்பியுமான கனிமொழி எம்பி வேட்பாளர்களை அறிமுகம் செய்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அனைவரும் போற்றும் வகையில் […]
