தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கொங்கு மாவட்டங்களில் திமுக தலைமை மீது அக்கட்சி நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூராட்சியில் பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்த குமரேசன் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து கொண்டனர். இந்த செய்தி மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
