தேனியில் வைகோ ஆவணப்பட வெளியீட்டு விழாவில் டிக்கெட் கிடைக்காததால் நிர்வாகிகள் இடையே தகராறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு தியேட்டரில் நேற்று மதிமுக சார்பாக வைகோ ஆவணப்பட வெளியிட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பங்கேற்று ஆவணப்படத்தை வெளியிட்டார். இதை தொடர்ந்து திரையரங்கில் ஆவணப்படம் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தை பார்ப்பதற்காக ஏராளமானோர் அங்கு திரண்டு வந்திருந்தார்கள். இதில் சிலருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என சொல்லப்படுகின்றது. இதனால் நிர்வாகிகளிடையே […]
