சேலம் மாவட்டம் மோரூர் பகுதியில் பல்வேறு கட்சிகளின் கொடிக் கம்பங்கள் இருக்கின்ற நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கொடிக்கம்பங்கள் நட முயற்சி செய்தபோது, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்று கூறி புதிய கொடிக்கம்பத்தை வைக்க தடை செய்தனர். இதனையடுத்து திருமாவளவன் நேரில் வந்த பிறகும்கூட காவல் துறையினர் இதற்கு அனுமதி மறுத்தனர். இதனால் காவல்துறையினர் மற்றும் விசிகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு காவல் துறையினர் தடியடி நடத்தினார்கள். இதன் பின்னர் திருமாவளவன் முதல்வர் முக ஸ்டாலின் அண்ணா […]
