கடை ஊழியரை கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ஜாபர் தெருவில் ரியாஸ் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் ராயக்கோட்டை சாலையில் டீக்கடை நடத்தி வந்துள்ளார். இந்த கடையில் ஷெனான்(34) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஓசூர் சாந்தி நகரைச் சேர்ந்த சமீர் அமத் என்பவர் டீ குடிப்பதற்காக கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து டீ நன்றாக இல்லை என கூறி சமீர் ஊழியரான ஷெனானுடன் தகராறு செய்துள்ளார். […]
