மதுரையில் வணிக வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் அருகே பயணிகள் நிழற்குடை, வணிகம் சார்ந்த வளாகங்கள் போன்றவை உள்ளன. இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள திறந்தவெளி சாக்கடையில் தனியார் சிலர் இரவு நேரங்களில் மனிதக்கழிவுகளை திறந்து விடுவதால் கால்வாய் நிரம்பி வெளியே வந்து பரவிக் கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமல்லாமல் சுகாதார சீர்கேட்டையும் உண்டாக்குகிறது. இதனால் காலையில் பஸ்ஸிற்காக நிழற்குடைக்கு வரும் பயணிகளும், […]
