செல்போன் கடையில் திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதுக்கோட்டை பாக்கியலட்சுமி நகர் பகுதியில் முத்துக்குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் புதுக்கோட்டையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் முத்துக்குமரன் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். அதன்பின் மறுநாள் காலையில் வந்து பார்த்த போது கடையின் ஷட்டரில் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு முத்துக்குமரன் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த செல்போன், […]
