பல்பொருள் அங்காடியில் பொருள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் முகமது முஸம்மில் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் சொந்தமாக பல்பொருள் கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவர் தனது கடையின் வியாபாரத்தை முடித்து பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் முகமது முஸம்மில் அதிகாலையில் அவ்வழியாக சென்ற போது தனது கடையின் பூட்டு மற்றும் ஷட்டரை கடப்பாரையால் உடைக்கப்பட்டு இருப்பதை […]
