பல்பொருள் விற்பனை அங்காடியில் இருந்த பணத்தை மூதாட்டி திருடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி சுலைமான் நகர் பகுதியில் பீர்முகமது(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பல்பொருள் விற்பனை அங்காடி நடத்தி வருகிறார். நேற்று காலை வாடிக்கையாளர் கேட்ட பொருளை எடுப்பதற்காக கடைக்கு அருகில் இருந்த குடோனுக்கு பீர்முகமது சென்றுள்ளார். அந்த சமயம் வேலை ஆட்கள் யாரும் கடையில் இல்லை. இந்நிலையில் எடுத்து வந்த பொருளை […]
