Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வனப்பகுதிக்கு அனுமதியின்றி சென்ற 3 பேர்… அபராதம் விதித்த வனத்துறையினர்…!!!

வனப்பகுதிக்குள் அனுமதியின்றி சென்ற மூன்று பேருக்கு வனத்துறையினர் ரூ 15,000 அபராதம் விதித்தார்கள். தென்காசி மாவட்டம், கடையத்தில் இருக்கும்  வனசரக எல்லைக்கு உட்பட்ட கோரக்கநாதர்கோவில் பீட் எல்லையில் அத்திரிமலை அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதிக்கு உரிய அனுமதி பெறாமல் யாரும் செல்லக்கூடாது. இந்நிலையில் திருக்கோவிலூரில் வசித்து வந்த ரங்கசாமி, ஆறுமுகம், ரமேஷ் ஆகிய மூன்று பேரும் அனுமதி பெறாமல் இந்த மலைக்கு சென்றார்கள். இதனால் வனத்துறையினர் இவர்களை கண்டித்து ரூ15,000 அபராதம் விதித்தார்கள்.

Categories
மாவட்ட செய்திகள்

கடத்தப்பட்ட 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்… தப்பியோடிய ஓட்டுனர்….!!

கடையத்திற்கு அருகில் சரக்கு வாகனத்தில் 4 டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வந்த நிலையில் அதிகாரிகள் அதனை கைப்பற்றியுள்ளனர். கடையத்திற்கு அருகில் இருக்கும் தெற்கு மடத்தூர்-காவூர் விலக்கு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் சோதனைப்பணியை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியே ஒரு சரக்கு வாகனம் வந்திருக்கிறது. அதனை, தடுத்து நிறுத்திய போது உடனடியாக ஓட்டுனரும் கிளீனரும் தப்பி ஓடி விட்டனர். அந்த சரக்கு வாகனத்தில் சுமார் நான்கு டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிய […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கள் விற்பனை செய்த இளைஞன்… ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்… 50 லிட்டர் கள் பறிமுதல்…!!

தென்காசி மாவட்டத்தில் அனுமதியின்றி கள் விற்பனை செய்த இளைஞரை கைது செய்த போலீசார் 50 லிட்டர் கள்-ஐ பறிமுதல் செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள நாலாம் கட்டளையில் அனுமதியின்றி கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரசையன் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த செபஸ்தியான் என்பவருடைய மகன் ராபர்ட்(25) கள் விற்பனை செய்தது உறுதியாகியுள்ளது. மேலும் அங்கிருந்த […]

Categories

Tech |