கோவிலுக்கு சொந்தமான கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான சுப்பிரமணிய சுவாமி கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 4 கடைகளை வாடகைக்கு விட்டுள்ளனர். இந்நிலையில் இந்த கடைகளை வாடகைக்கு எடுத்தவர்கள் சரியாக வாடகை கொடுக்காமல் இருந்துள்ளனர். மொத்தம் 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வாடகை பாக்கி இருந்துள்ளது. இதனையடுத்து இந்த வாடகை பணத்தை கேட்டு அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். […]
