சென்னையில் உள்ள 125 கடைகளுக்குசென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாகசீல் வைத்துள்ளனர். நேற்று ராயப்பேட்டை சென்னையில் எல்.பி. சாலை, திருவல்லிக்கேணி பாரதி தெருவில் திடீர் விசிட் அடித்த அதிகாரிகள், தொழில் வரி, வணிக உரிமம் செலுத்தாத கடைகளை கண்டறிந்து அந்த கடைகளுக்கு சீல் வைத்தனர். மேலும் இது சென்னையில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதிலும் வரி செலுத்தாத அனைத்து கடைகளுக்கும் சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
