அண்டார்டிகாவில் கடுமையான வெப்ப மண்டலம் காரணமாக ராட்சத அளவிலான பனிப்பாறை உருகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்டார்டிக்காவில் கிழக்கே கடுமையான வெப்பநிலை காரணமாக முதன்முறையாக 1,200 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட ‘காங்கர் பனி அடுக்கு’ என்னும் ராட்சத அளவிலான பனிப்பாறை உருகி சரிந்துள்ளது. இந்த பனிப்பாறையின் அளவு ரோம் நகரத்தின் பரப்பளவுக்கு சமமானது. இந்த நிலையில் நன்னீரால் ஆனா அண்டார்டிகாவில் பனி அடுக்குகள் ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் இந்த நிகழ்வு […]
