சீனா, அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த கடும் ஊரடங்கை நடைமுறைப்படுத்தியிருக்கிறது. சீன நாட்டின் வடகிழக்குப் பகுதிகளில் தற்போது வரை இல்லாத வகையில் கொரோனா கடுமையாக அதிகரித்திருக்கிறது. எனவே, லட்சக்கணக்கான மக்களை வீடுகளிலிருந்து வெளியே வரக்கூடாது என்று கடும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்நாட்டின் ஜிலின் மாகாணத்தில் சுமார் 4.5 லட்சம் மக்கள் இருக்கிறார்கள். இந்நகரில் இன்று இரவிலிருந்து தொடர்ந்து மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த மாகாணத்தில் சாங்சுன் நகரில் சுமார் 9 லட்சம் மக்கள் இருக்கிறார்கள். […]
