ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு 1000 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்குப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு அதிக உயிர் பலிகளை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் எல்லைக்கு அருகில் இருக்கும் கோஸ்ட் மற்றும் பக்டிகா ஆகிய மாகாணங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 என்ற அளவில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கோஸ்ட் மற்றும் பக்டிகா ஆகிய மாகாணங்களில் கடும் அதிர்வுகள் ஏற்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டில் […]
