ஆப்கானிஸ்தான் நாட்டினுடைய ராணுவ வீரர்களுக்கும், மர்ம நபர்களுக்குமிடையே காபூல் விமான நிலையத்தின் நுழைவுவாயில் முன்பாக நடந்த துப்பாக்கி சூட்டில் ஆப்கன் வீரர் ஒருவர் கொல்லப்பட்டதோடு 3 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தலிபான்கள் கைப்பற்றியுள்ளார்கள். இதனால் அந்நாட்டில் தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து அந்நாட்டிலுள்ள ஏராளமானோர் அங்கிருந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்காக காபூல் விமான நிலையத்தின் முன்பாக குவிந்து வருகிறார்கள். அவ்வாறு காபூல் விமான நிலையத்தின் முன்பாக குவிந்துள்ளதால் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் […]
