ராமநாதபுரம் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நோய்த்தொற்றிலிருந்து நம்மை நாமே காக்கும் ஒரு கவசமாக முகக்கவசம் இருந்து வருகின்றது. இதுகுறித்து சுகாதார துறையினர் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகளை கூறியும் சிலர் எவ்வித அச்சமும் இன்றி முகக்கவசம் அணியாமல் வெளியே வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி மண்டலா துணை தாசில்தார் சந்திரன் மற்றும் சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி தலைமையில் […]
