அண்ணாமலையின் டுவிட்டர் பதிவால் திமுக நிர்வாகிகள் கடுப்பில் இருக்கின்றனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதாவது தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 11-ம் தேதி போதைப்பொருள் விழிப்புணர்வு நாளாக அனுசரிக்கப்படும் என்று கூறிவிட்டு, தமிழகத்தை போதை பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என்று உறுதிமொழி எடுத்தார். அதன் பிறகு தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகள் போதை பொருளை ஒழிப்போம் […]
