சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகரில் கணேஷ் ராமன்(36) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த மார்ச் மாதம் 100 கிராம் தங்க நாணயத்தை வாங்கி ஒரு கவரில் போட்டு வீட்டின் கட்டிலுக்கு கீழ் வைத்துள்ளார். இது தெரியாத அவரது மனைவி வீட்டை சுத்தம் செய்யும்போது அந்த கவரை குப்பையில் போட்டுள்ளார். இதுகுறித்து கணேஷ் ராமன் சாத்தாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் தனியார் ஒப்பந்த நிறுவனம் மேற்பார்வையாளர் செந்தமிழ் செல்வன் என்பவரிடம் […]
