கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடல் பகுதிகளில் சஜாக் ஆப்பரேஷன் என்ற பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் இந்த பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசார் மற்றும் கடலோர காவல் துறையினர் இணைந்து அதிவிரைவு ரோந்து படகுகளில் ஒத்திகையில் ஈடுபட்டு உள்ளனர். காலையில் 7 மணிக்கு தொடங்கிய இந்த ஒத்திகை மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. கடலில் சந்தேகிக்கும் படி யாராவது […]
