கணவர் கண் எதிரே டேங்கர் லாரி மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொளத்தூர் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு நளினா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பிரபாகரன் தனது மனைவியுடன் வில்லிவாக்கம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த டேங்கர் லாரி இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. […]
