மீன்பிடிக்க சென்ற மீனவர் கடலுக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அடுத்துள்ள மேல குறும்பனை பகுதியில் ததேயூஸ் மகேஷ் (48) என்பவர் வசித்து வந்துள்ளார். மீனவரான இவர் சம்பவத்தன்று அதிகாலையில் 5 மீனவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த யூஜின் என்பவருக்கு சொந்தமான வள்ளத்தில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் குறும்பனையில் இருந்து 28 கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி கடலுக்குள் விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி […]
