கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் அருகே கொட்டில்பாடை பகுதியில் சேசடிமை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலெக்ஸ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். இவர் கடந்த 19-ஆம் தேதி சூசை நாயகம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் முட்டம் துறைமுகத்திலிருந்து 11 பேருடன் சேர்ந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார். இவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அலெக்ஸ் தன்னுடைய வலையில் சிக்கிய மீனை இழுத்துள்ளார். […]
