பிரித்தானியாவில் கடலில் சிக்கிய 10 வயது சிறுவன் தன்னம்பிக்கையால் உயிர் தப்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் வடக்கு யார்க்ஷயரில் இருக்கின்ற ஸ்கார்பாரோ பகுதியில் கடற்கரையில் 10 வயது சிறுவன் ரவீராஜ் சைனி தனது தந்தை நாதுராமுடன் நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருந்தான். இந்நிலையில் சிறுவன் எதிர்பாராதவிதமாக கடலின் ஆழத்திற்குச் சென்றுள்ளான். அதனைக் கண்ட அவரின் தந்தைக்கு நீச்சல் தெரியாததால் அவனை காப்பாற்ற முடியவில்லை. இந்நிலையில் சிறுவன் பயத்தில் தத்தளிப்பதற்கு பதிலாக, மிகவும் அமைதியான முறையில் கடலில் மிதந்திருக்கிறான். […]
