ஸ்பெயின் நாட்டில் எரிமலை வெடிப்பால் வெளியேறிய சாம்பல் கடலில் கலந்து சுற்றுசூழல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டின் லா பால்மா தீவில் கடந்த மாதம் 19 ஆம் தேதி முதல் கும்ரி விய்ஜா எரிமலை வெடித்து சிதறி தீக்குழம்பை கக்கி வருகிறது. இந்த எரிமலை குழம்பில் 2000-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் எரிந்து சாம்பலானது. இதனால் அங்குள்ள ஆயிரக்கணக்கான மக்கள் மீட்புகுழுவினர் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் லா பால்மாவின் கும்ப்ரே விய்ஜா எரிமலையில் இருந்து […]
