கடலூர் தாழங்குடா கடற்கரையில் மீன்வளத் துறை சார்பாக கடலரிப்பு தடுப்பு சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்ட கடலில் கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த மாற்றத்தினால் அடிக்கடி மண்ணரிப்பு ஏற்படுகிறது. தண்ணீர் ஊருக்குள் வருகிறது. மேலும் நீரோட்டத்தில் மாற்றம் ஏற்படுகிறது. இதை தடுப்பதற்காக கடற்கரையோரம் கருங்கல்லை கொட்டி மண்ணரிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுத்தனர். அதன்பின் கடலூர் தாழங்குடாவிலிருந்து தேவனாம் பட்டினம் வரை கடற்கரை ஓரம் […]
