கோடியக்கரை அருகே நடுகடலில் மீனவர்களை தாக்கி மீன்கள் மற்றும் வலைகளை பறித்துச் சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி அருகே இருக்கும் பெருமாள்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த பூவரசன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், தென்னரசன், நிவாஸ், அருள்ராஜ், சரத் உள்ளிட்ட ஆறு மீனவர்கள் சென்ற 12-ம் தேதி மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளார்கள். இவர்கள் […]
