பட்டினப்பாக்கம் கடற்கரை மணலில் புதைந்து கிடந்த 2 சாமி சிலைகளை காவல்துறையினர் மீட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள சீனிவாசபுரம் கடற்கரை மணலில் புதைந்த நிலையில் கிடந்த 2 சாமி சிலைகளை பார்த்த பொதுமக்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அதில் ஒரு சிலையான பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை மற்றும் மற்றொரு சிலையான சித்தர் சிலையையும் பத்திரமாக மீட்டனர். இதேபோன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு பட்டினபாக்கம் கடற்கரை மணல் […]
