சொத்தவிளை கடற்கரைக்கு சென்ற வாலிபர் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகில் கீழமறவன்குடியிருப்பு சிவன் கோவில் தெருவில் வசித்து வருபவர் செல்வகுமார். இவருடைய மகன் கிருஷ்ணகுமார்(24). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் பறக்கையில் இருக்கின்ற ஒரு பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி வழக்கம்போல் கிருஷ்ணகுமார் பைக்கில் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் […]
