மாமல்லபுரத்தில் இலவச அனுமதி அளித்ததால் ஒரே நாளில் 20,000 சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய தொல்லியல் துறை சார்பாக நேற்று முன்தினம் முதல் ஒரு வாரத்திற்கு உலக பாரம்பரிய வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டை பாறை போன்ற புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் கண்டு களிப்பதற்கு நேற்று முன் தினம் ஒரு நாள் காலை 8 மணி […]
