வீட்டுக் கடன்கள் மற்றும் சில்லரை கடன்களை வாடிக்கையாளர்கள் திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை இரண்டு ஆண்டுகள் வரை பாரத ஸ்டேட் வங்கி நீட்டித்துள்ளது. கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் தாங்கள் பெற்ற வீட்டு கடன் அல்லது சில்லறை கடனை திருப்பி செலுத்த இரண்டு ஆண்டுகள் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம், அல்லது மாத தவணையை இரண்டு ஆண்டுகளுக்கு மறுசீரமைப்பு செய்து நீட்டித்துக் கொள்ளலாம் என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்திருக்கிறது. 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் […]
