தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா இன்று 38-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவர் கேரள மாநிலத்தில் உள்ள திருவல்லா என்ற பகுதியைச் சேர்ந்தவர். நடிகை நயன்தாராவின் இயற்பெயர் டயானா குரியன். மலையாள சினிமாவில் தொகுப்பாளினியாக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய நயன்தாரா கடந்த 2003-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மனசினக்கர என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு கடந்த 2005-ம் ஆண்டு தமிழில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் […]
