மாணவியை கடத்தி 3-வது முறை திருமணம் செய்த டிரைவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பூச்சி நாயக்கன்பாளையம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகின்றார். இவர் லாரி டிரைவராக இருக்கின்றார். இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து 2 மனைவிகள் மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதனையடுத்து ரவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவி திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் வசித்து வருகின்றார். இதனால் ரவியுடன் 2-வது மனைவி வசித்து வருகின்றார். […]
