கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர் . நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் தாலுகா வேட்டைகாரனிருப்பு பகுதியில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் ஒருவர் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருப்பதைக் கண்ட போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் விழுந்தமாவடி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் (27)என்பதும் ,அவர் பையில் சிறுசிறு கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து […]
