தடையை மீறி கஞ்சா விற்பனை செய்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள லூர்தம்மாள்புரம் பகுதியில் தடையை மீறி கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒருவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததை பார்த்து அவரை கையும், களவுமாக பிடித்து விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியான மாரியப்பன் என்பது […]
