வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி காவல்துறையினர் அன்னை தெரசா நகரில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தியபோது கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்தது மேலபாண்டவர்மங்கலம் பகுதியில் வசிக்கும் பாலகிருஷ்ணன், அன்னை தெரசா நகர் பகுதியில் வசிக்கும் […]
