கஞ்சா விற்பனை செய்துவிட்டு பெண் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள பார்த்திபனூர் பகுதியில் உள்ள வல்லம்பர் சந்தோஷ்குமார் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் கஞ்சா விற்பனை செய்வதாக பார்த்திபனூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சுதா தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் கஞ்சா விற்பனை செய்த சந்தோஷ்குமாரை பிடிக்க முயன்றுள்ளனர். […]
