நிலத்தில் பயிரிட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஜமுனாமரத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனையை தடுப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் உத்தரவின்படி தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திமிரி மரத்தூர் கிராமத்தில் வசிக்கும் நடராஜன் என்பவர் தனது நிலத்தில் கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்துள்ளார். இதனையடுத்து அதனை காயவைத்து பொட்டலம் கட்டி நிலத்தில் மறைத்து வைத்து விற்பனையில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ […]
