ஆவடி போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் கஞ்சா வியாபாரியின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள செய்யூர் அடுத்திருக்கும் அரசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் நேற்று முன்தினம் அம்பத்தூரில் கஞ்சா வைத்திருந்ததாக போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். மேலும் அவரிடம் இருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தார்கள். இவர் மீது ஏற்கனவே இரண்டு கஞ்சா விற்பனை செய்த வழக்குகளும் ஒரு வழிப்பறி வழக்கும் இருக்கின்றது. […]
